சஹ்ரானின் மைத்துனர் கைது; ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் குற்றச்சாட்டு
பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் நுவரெலியா கடுபெத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
28 வயதுடைய முஹம்மட் அப்துல் காதர் அஸீம் எனும் இவர், சஹ்ரானுடன் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனக் கூறப்படுகிறது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இவர், நுவரெலியாவில் இயங்கிவந்த பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் பயங்கரவாத குழுவுக்கு உதவிகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.