தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

🕔 October 6, 2015
Thajudeen - 01
கர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, ஆய்வு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

கைத்தொலைபேசியின் நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள், இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் தாஜூடீன் உயிரிழக்கவில்லை என்றும், அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில், கைத்தொலைபேசியின் தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துமாறு, நீதவானிடம் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு, மேற்படி ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையினையும் சமர்ப்பித்துள்ளது.

இதேவேளை, தாஜுடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும், அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில், முரண்பாடுகள் காணப்படுவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, புதிதாக ரசாயன பகுப்பாய்வு அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு,  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, நேற்று புதிய அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்