அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

🕔 March 6, 2019

ட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர் காயமடைந்த நிலையில், கண்டி மற்றும் மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவனல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா பேசியபோது, ஒருவரே உயிரிழந்துள்ளார் என்றும்,  படுகாயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments