தலைப்புச் செய்திகள்

புதிய பிரதமரை நியமிக்கத் தயார்: ஜனாதிபதி தெரிவிப்பு

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைளைப் பின்பற்றி, பெரும்பான்மையினைக் காண்பித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதேவேளை, “மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால், அவரே ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்” எனவும் அவர் கூறினார்.

எவ்வாறிருந்த போதும், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், “நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, மீண்டும் அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன்” எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.