இலங்கையில் 34,316 வேலையற்ற பட்டதாரிகள்; கலைத் துறையினரே அதிகம்
இலங்கையில் 34 ஆயிரத்து 316 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்று, புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 18,626 பேர் கலைப் பட்டதாரிகளாவர். வேலையற்ற மொத்தப் பட்டதாரிகளில் இவர்கள் 54.3 வீதத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை என்பது எதிர்காலத்தில் மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாகலாம் என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.