எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே
நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்று, பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
“நாடாளுமன்றில் 121 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தனிப்பட்ட கட்சி எனும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 100 ஆசனங்களே உள்ளன.
அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 103 ஆசனங்கள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, டிசம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறிய அவர், முக்கியமான முடிவுகளை அவராங்கம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.