பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

🕔 November 10, 2018

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், நேற்று நள்ளிரவு ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து, உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணைக்குழு கோரும் என தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தின் அமர்வுகளை இடைநிறுத்துவதாக, அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி நடவடிக்கையை எடுத்ததாகவும், முன்னாள் அமைச்சர் ராஜித சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்குரிய எண்ணிக்கை இல்லை என்பது தெரிந்தவுடன், ஜனாதிபதி சிறிசேன இரண்டாவது சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்