அரச இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டன; புலிகளின் கொடியும் பதிவேற்றம்

🕔 May 19, 2018

ரச இணையத்தளங்கள் பலவற்றினை நேற்று வெள்ளிக்கிழமை, குறிப்பிட்ட ஒரு அமைப்பு  ஹேக் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 50 இணையத்தளங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டிருந்தன.

அதேவேளை,  மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள், சில பதிவுகளையும் குறித்த இணையத்தளங்களில் இட்டுள்ளனர்.

மேற்படி இணையத்தளங்களை ஹேக் செய்தவர்கள் தம்மை, ‘தமிழ் ஈழம் சைபர் ஃபோஸ்’ என அடையாளப்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின்யின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதோடு, அதன் பக்கத்தில் விடுதலைப் புலிகளின் கொடியும் பதிவிடப்பட்டிருந்தது.

500 அரச இணையத்தளங்களை ஹேக் செய்யவுள்ளதாக, குறிப்பிட்டதொரு அமைப்பு முன்னணி அரச நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஈமெயில்களை அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்