ஐ.தே.கட்சியினுள் கிளர்ச்சி: 04ஆம் திகதி ரணில் நீக்கப்படுவார்: நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித

🕔 March 30, 2018

த்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரமே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்துள்ளமைக்கு பிரதான காரணமாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிர அபேகுணவர்த்தன தெரித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“நம்பிக்கையில்லா பிரேரணை மூலம், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை அகற்றும் செயற்பாட்டினை ஒன்றிணைந்த எதிரணி, ஏப்ரல் 04ஆம் திகதி முன்னெடுக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், பல குழுக்களும் உருவாகியுள்ளன.

அதேவேளை, ஊழலுக்கு ஆதரவானவர்களை ஏப்ரல் 04ஆம் திகதி மக்கள் அடையாளம் காண முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்