விமலின் மகள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சாதனை

🕔 March 30, 2018

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மகள் விமாஸா விஷ்வாதாரி, க.பொ. த. சாதரண தரப் பரீட்சையில்  09 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து விமாஸாவுக்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் வாழத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விமல் வீரவன்ச மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டதோடு, விளக்க மறியலிலும் விமல் வீரவன்ச வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விமாஸா இவ்வாறான அடைவினைப் பெற்றுமை பாராட்டுக்குரிய விடயமாகும்

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்