அக்கரைப்பற்றில் டயர் எரிக்கப்பட்டமையை அடுத்து, கொழும்பு கிளம்பினார் அதாஉல்லா

🕔 March 15, 2018

– அஹமட் –

தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு எதிராக, அவரின் கட்சிக்காரர்கள் நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமையினை அடுத்து, அக்கரைப்பற்றில் தங்கிருந்த அதாஉல்லா, நேற்று இரவு  திடீரென கொழும்பு சென்றுள்ளார்.

அக்கரைப்பற்றில் நேற்றைய தினம் அதாஉல்லாவுக்கு எதிராக, அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் டயர்களை வீதிகளில் எரித்ததோடு, அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனையடுத்தே, தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் தங்கியிருந்த அதாஉல்லா, நேற்றிரவு கொழும்புக்கு விரைந்துள்ளார்.

அக்கரைப்பற்றிலுள்ள அதாஉல்லாவின் ‘கிழக்கு வாசல்’ இல்லத்துக்கு அருகாமையிலும், நேற்று டயர்கள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா அறிவித்தமையினை அடுத்து, அவருக்கு எதிரான மேற்படி நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகள் தமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்து ஏமாந்தவர்களே, இந்த டயர் மற்றும் பதாகை எரிப்பு நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments