உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

🕔 March 16, 2018

ள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், சீராக்கல் பணிகள் நிமித்தம் தாமதம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது 10 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள், இன்றைய தினத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. அவற்றில் 24 மாநகரசபைகளும், 41 நகர சபைகளும் 275 பிரதேச சபைகளும் அடங்குகின்றன.

இவற்றுக்காக 8,325 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் 5,061 பேர் வட்டார அடிப்படையிலும், 3264 பேர் விகிதார அடிப்படையிலும் தெரிவாகியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்