மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

🕔 August 20, 2015

Harin+Prasanna+Dayasri

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம்  55  வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.

மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மத்திய மாகாண சபையின் எதிர்கட்கி தலைவர் ரஞ்சித் அலுவிஹாரே, சப்ரகமுவ மாகாண சபை எதிர்கட்சி தலைவர் துசிதா விஜேமான்ன, வடமேல் மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் ஜே.சீ. அலவதுவல, வடமத்திய மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சிட்னி ஜயரத்ன ஆகியோரும் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாண சபையில் இருந்து 14 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண சபைகளில் இருந்து, தலா ஏழு பேர் வீதம் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தென்மாகாண சபையில் இருந்து ஐந்து பேரும், கிழக்கு மாகாண சபையில் இருந்து நான்கு பேரும், வடமத்திய மற்றும் வட மாகாணத்தில் இரண்டு பேர் வீதம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களே,  இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 36 ஆகும்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 15 பேரும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச்  சேர்ந்த தலா இரண்டு பேரும், மாகாண சபையில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்