முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி

🕔 August 19, 2015

Asad saali - 032முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டுமென, மத்திய மாகாண சபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி வலியுறுத்தினார்.

அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷக்கு தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் எல்லாவற்றினையும் நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சலுகைகளை மட்டுமே அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆசாத் சாலி அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிதன் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி எனும் அந்தஸ்தை இழந்து விட்டார். தற்போது, அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவார்.

ஆகவே, முன்னாள் ஜனாதிபதி எனும் வகையில், அவருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகள் ரத்துச் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சலுகைகள் மட்டுமே வழங்கப்படவேண்டும்.

மக்களுக்கு செய்த அநீதி மற்றும் துரோகங்களுக்காகவே, மஹிந்தவுக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்