ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

🕔 February 4, 2018

– இர்பான் முகைதீன் –

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது பள்ளிவாசல் நிருவாகம்தான் ஹக்கீமை தலைவராக்கியது.

பிரதேச சபை தருகிறேன் என்று சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி விட்டு, அந்த ஊருக்கு ஹக்கீம் சென்றபோது, மக்கள் தும்புத்தடி, செருப்பு போன்றவற்றுடன் வீதியில் நின்று விரட்டினார்கள்.

விசேட அதிரடிப்படையினரின் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு, வெட்கமில்லாமல் சாய்ந்தமருதுக்கு ஹக்கீம் போவதை வீடியோக்களில் கண்டேன்.

ஓர் ஊர் எதிர்த்தால், அங்கு போகக் கூடாது.

ரஊப் ஹக்கீம் – முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு. அந்த சாபக்கேட்டை விரட்டி அடிக்க வேண்டும்” என்றார்.

வீடியோ

Comments