பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

🕔 February 4, 2018

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகளை இன்று காலை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்து, அவர்களைக் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறை மோசடி தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோரை, சந்தேக நபர்களாக நீதிமன்றம் பெயரிட்டிருந்தது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி அறிக்கையின் பிரகாரம் கோட்டே நீதவான் நீதிமன்றில், சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இதனையடுத்து, மேற்படி மூவரையும் சந்தேக நபர்களாக நீதிமன்றம் பெயரிட்டிருந்தது.

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மூலமாக, 11,145 மில்லியன் ரூபாவினை பெர்பேசுவல் நிறுவனம் லாபமாகப் பெற்றிருந்ததாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்