அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

🕔 November 28, 2017

-அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக, தற்போதைய மழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துள்ளது.

இருந்தபோதும், சில தாழ்நிலப் பகுதிதிகளில் நீர் தேங்கி நிற்பதைக் காண முடிகிறது.

கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றமையினால், கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போதைய காலநிலையானது நுளம்புப் பெருக்கத்தை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இது – மாரி மழை பொழியும் பருவ காலம் என்பதோடு, வளி மண்டலத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளமையினால், தற்போது பெய்து வரும் மழை வீழ்ச்சி நீடிக்கவும் கூடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்