கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

🕔 November 27, 2017

– அஹமட் –

ள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற மாட்டாது.

தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி சபைகளிலும் மேற்படி உள்ளுராட்சி சபைகள் உள்ளடங்கவில்லை.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் பின்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

1. நாமல் ஓயா பிரதேச சபை 2. தெஹியத்தகண்டிய பிரதேச சபை 3. பதியத்தலாவ பிரதேச சபை 4. அக்கரைப்பற்று மாநகர சபை 5. அட்டாளைச்சேனை பிரதேச சபை 6. லஹுகல பிரதேச சபை 7. கரைதீவு பிரதேச சபை 8. சம்மாந்துறை பிரதேச சபை 9. அக்கரைப்பற்று பிரதேச சபை 10. நாவிதன்வெளி பிரதேச சபை 11. இறக்காமம் பிரதேச சபை 12. ஆலையடிவேம்பு பிரதேச சபை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்