நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

🕔 August 8, 2015

Hakeem - Valaichenai - 01
– எம்.ஐ.எம் – 

க்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்தெரிவித்தார்.

வாழைச்சேனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, மு.காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டுஉரையாற்றும்போதே, இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்;

“எமது கட்சி போட்டியிடும் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றியை நோக்கியே பயணிக்கின்றது. அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்தையும் நாம் வெல்வது உறுதி. இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி – முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால், இரண்டுஆசனங்களை வெல்லும் நிலை உருவாகியிருக்கும் .தனித்துப் போட்டியிடுவதால் ஒன்றைக்கூட வெல்ல முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி தோற்க வேண்டுமென்ற நோக்கத்தில், நான் இதைச் சொல்லவில்லை.யதார்த்தத்தைச் சொல்லுகிறேன். ஐக்கிய தேசிய கட்சி பலமான ஆட்சியொன்றை அமைக்கும். அந்த ஆட்சிக்கு பலம் கொடுக்கும் கட்சியாக, நாம் இருப்போம். மு.காங்கிரசானது, சில இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவது, எமது ஆசனங்களை அதிகரிப்பதற்கான வியூகமாகும். 10 ஆசனங்களை நாம் வெல்வோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றியானது முஸ்லிம்களின் வெற்றியாகும். அது இக்கட்சியில்போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியல்ல. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் எம்முடன் இணைந்திருக்கின்றது. இது எமக்கு மேலும் பலத்தைச் சேர்க்கின்றது.

அமையப்போகும் பலமான அரசினூடாக, நாம் அதிக அபிவிருத்திகளை இந்த மாவட்டத்துக்குச் செய்வோம். 2000 கோடிரூபா செலவிலான நீர் வழங்கும் திட்டத்தை, நாம்  இங்கு முன்னெடுக்கவுள்ளோம். ஆகவே, எமது இனத்தின் அரசியல்அடையாளமான இந்தக் கட்சியைப் பாதுகாப்பது, எம் அனைவரினதும் கடமையாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்