உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப்

🕔 September 19, 2017

– றிசாத் ஏ காதர் –

மூகத்தில் கணிசமனோர் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை அடையாளம் காணும் போது, பிரதேச செயலங்களில் நியமிக்கப்பட்டுள்ள உளவளத்துணையாளர்களை அனுகச் செய்யலாம். அதற்குத்  தேவையான வழிகாட்டல்களை, தற்கால சூழலில் ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று, சிரேஷ்ட உளவளத்து துணையாளர் ஜரூன் ஷரீப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்காக ‘ஊடகமும், உளவளத்துணையும்’ எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்று  இன்று செவ்வாய்கிமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் மற்றும் நலனோம்புகை அமைச்சின் உளவளத்துணைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ், அம்பாறை மாவாட்ட செயலக உளவளத்துணைப் பிரிவு, மேற்படி செயலமர்வினை நடத்தியது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, சிரேஷ்ட உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

இச் செயலமர்வில் ஊடவியலாளர்கள் உள, சமூக மாற்றத்துக்கு எவ்வாறு பங்களிப்புச் செய்வது, சமூகத்திலுள்ள உளவியல் சார் பிரச்சினைகளை அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்துவதுக்கான வழிகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் ஊடகப் பணியில் உளவளத்துணையின் வகிபங்கு என்ன? என்பது தொடர்பான விரிவான விளக்கவுரை நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலளார்களுக்கு வழங்கப்பட்டது.

மேற்படி செயலமர்வில் வளவாளராக, மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் அஷ்ஷேஹ், சட்டத்தரணி தீன் முகம்மட் கலந்துகொண்டு விரிவுரையினை நடத்தினார்.

சமூகசேவைகள் மற்றும் நலனோம்புகை அமைச்சின் செயற்பாடுகள், உளவளத்துணைக்கு ஆற்றுகின்ற பணிகள் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.  அப்துல் லத்தீப், உதவிப்பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸீன் மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.தமீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செயலமர்வினை அக்கரைப்பற்று பிரதேச செயலக உளவளத்துணை பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஆப்தீன் நெறிப்படுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்