ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

🕔 September 19, 2017
னாதிபதியுடன் அமெரிக்கா செல்லவிருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடு வீசா வழங்க மறுத்துள்ளது. இந்தத் தகவலை சரத் பொன்சேகாவே வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, அமெரிக்காவின் நிவ்யோக் நகருக்கு ஜனாதிபதி பயணித்துள்ளார். இதன்போது ஜனாதிபதியுடன் செல்லும் குழுவில் தனது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஆனால், தனக்கு வீசா வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்து விட்தாகவும் அவர் கூறியுள்ளார்.
களனியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.
அநியாயக்காரர்களைத் தண்டிப்பதன் மூலம் ராணுவத்தின் நல்ல பெயரைக் காப்பாற்றுமாறு – தான் வேண்டுகோள் விடுத்ததாக இதன்போது கூறிய அமைச்சர்; போர் என்ற பெயரில் சிலர் மேற்கொண்ட தவறான நடத்தைகள் மூலம், தானும் போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்