ஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம்

🕔 May 10, 2017

ம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன.

முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கல்முனைத் தொகுதியிலுள்ள மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், இது குறித்து கையாலாகாத்தனமாக உள்ளார் என்றும், தனது சொந்த ஊரிலுள்ள அலுவலகங்கள் இவ்வாறு இடம் மாற்றப்படுகின்றமை குறித்து, சொரணையற்று உள்ளமை தொடர்பிலும் மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதேவேளை, இதனை மையமாக வைத்து பல்வேறு பகிடிகள், சமூக வலைத்தளங்களிலும், வட்ஸ்அப்பிலும் உலவி வருகின்றன.

அவற்றில் ஒன்றினை புதிது ‘மீம்’ ஆக வடிவமைத்து வழங்குகிறது.

Comments