நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

🕔 May 10, 2017

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது.

ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பதால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைனையடுத்து, குறித்த பதவியிலிருந்து கீதா நீக்கப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.

Comments