அபிவிருத்தி திட்டங்களை கையளிக்கும் மு.கா.வின் கல்முனை நிகழ்வில், ஹக்கீம் பங்கேற்பு

🕔 April 1, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

‘மண்­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்’ எனும் தொனிப்­பொ­ருளில் அபி­வி­ருத்தி திட்டங்களை கைய­ளிக்கும் வைபவங்களின் முதல்நாள் நிகழ்­வுகள், நேற்று வௌ்ளிக்கி­ழ­­மை கல்­முனை தொகு­தியில் நடை­பெற்­ற­­ன.

விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்­பாட்டில் நடைபெற்ற இந்த நிழக்வுகளில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும் அமைச்­ச­ருமான ரவூப் ஹக்கீம் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு அபி­வி­ரு­த்தி திட்­டங்­களை திறந்துவைத்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட சேனைக்குடியிருப்பு, இஸ்லாமாபாத் மற்­றும் பெரிய நீலாவணை பிர­தே­சங்­க­ளி­லுள்ள சனசமூக சுகாதார நிலையங்கள் இதன்போது திறந்­து­வைக்­கப்­பட்­ட­­ன.

பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனை அல்-ஹம்ரா வித்தியாலயத்தின் 03 மாடிக் கட்டிடம் மற்றும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் மகளிர் பிரி­­வுக்கு 03 மாடி பல்தேவை­க் கட்டிடம் என்பனவும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் கீழ் விஸ்தரிக்கப்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க விஸ்தரிக்கப்பட்ட கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

கல்முனை, கிறீன்பீல்ட் பிரதேசத்திலுள்ள றோயல் வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்துவரும் இரு மாடி வகுப்பறை கட்டிடத்தை கட்டுவதற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் பிரதியமைச்சர்களா­ன எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம். மன்­சூர், அலி­சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், சிப்லி பாறுக், ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர், ஜே.எம். லாஹிர், நாடாளுமன்ற முன்னாள் உறுப்­பினர் ஹுனைஸ் பாறுக், கட்­சியின் செய­லாளர் மன்சூர் ஏ. காதிர், தவி­சாளர் ஏ.எல். அப்துல் மஜீட், அமைச்­சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், உயர்­பீட உறுப்­பி­னர்கள் மற்றும் கட்­சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்­து­கொண்­ட­னர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்