வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

🕔 April 1, 2017
பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல  அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.

கடந்த  இரண்டு  நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி,  பல்கலைக்கழக மாணவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்தவகையில் இன்று காலை  மாணவர்களின்   கோரிக்கைகளை நிர்வாகத்தினர் ஏற்று வகுப்புத்தடையினை ரத்து செய்தனர்.
இது தொடர்பில், கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவருக்கு, உப வேந்தர் கடிதமொன்றினை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை திங்கட்கிழமை வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments