நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

🕔 March 24, 2017

நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என ஒன்பது பேருக்காகவாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி 09 பேருக்குமான வாகனங்களுக்கே, 370 மில்லியன் ரூபாய் (37 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சர்கள் இவ்வாறு பெருமளவு பணத்தினைச் செலவிட்டு வாகனங்களை இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்