கோட்டாவின் கோடீஸ்வரர் வாழ்க்கை: அம்பலமாக்கினார் அமைச்சர் பொன்சேகா

🕔 March 24, 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மாதாந்தம் 80 ஆயிரம் சம்பளத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் என்றும், ஆனால் அவர் கோடீஸ்வரராக வாழ்வதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு 10 ஆயிரம் டொலர்களோடு வந்த கோட்டா, பின்னர் கோடீஸ்வராக வாழ்வதாகவும் அமைச்சர் பொன்சேகாக கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவற்றினைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கோட்டாபய ராஜபக்ஷ ஒரு நல்ல அரச ஊழியர் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவரின் உண்மை முகம் வெளிப்படுத்தப்படவில்லை.

உதாரணமாக கூறுகின்றேன், அவர் வீட்டில் ஒரு மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது 40 அடி நீளமும், 13 அடி அகலமும் 08 அடி உயரமும் கொண்டது.

அந்த மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பெறுமதி கூடியதாகும். சாதாரணமாக 04 அடி கொண்ட தொட்டி ஒன்றை அமைக்கவே 02 லட்சத்திற்கும் அதிகமாகத் தேவைப்படும்.

அது மட்டுமல்ல, அதில் உள்ள மீன்களுக்கு ஒரு நாளைக்கு 15 கிலோ கோழி இறைச்சி வழங்கப்படுகின்றது. மேலும் அவற்றை பராமரிக்க நாளாந்தம் பல ஆயிரங்கள் செலவு செய்யப்பபடுகிறது.

மாதாந்தம் 80000 ஆயிரம் ரூபா சம்பளம் பெறும் ஒருவருக்கு இப்படியான வீட்டுச் செலவை செய்ய முடிந்தது எவ்வாறு? இதுதான் நேர்மையான அரச ஊழியரா எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்