மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன.
யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன.
யோசிதவின் புதிய காதலி யொஹானா -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார்.
மேலும், இவர் – முன்னாள் ராணுவத்தளபதியும், அரசியல்வாதியுமான அனுருத்த ரத்வத்தையின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யசாராவுடன் யோசித ராஜபக்ஷவுக்கு காதல் உறவு முறிவடைந்ததை அடுத்து, யொஹானாவுடனான உறவு 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்ததாக அறியமுடிகிறது.




