மட்டக்களப்பு பல்லைக்கழகத்துக்கு உதவிகளை வழங்குவேன்; அமைச்சர் ஹிஸ்புலாவிடம் மலேசிய முதலமைச்சர் உறுதி

🕔 June 3, 2016

Hisbullah - 0976
ட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் – தொழில்நுட்ப ரீதியாகவும், பாட விதான ரீதியாகவும் வழங்குவதாக மலேசியாவின் பிராக் மாநில முதலமைச்சர், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தார்.

மலேசியவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தனது குழுவினருடன் இன்று வெள்ளிக்கிழமை காலை மலேசியாவின் பிராக் மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே, அவர் இந்த உறுதியை வழங்கினார்.

பிராக் மாநில முதலமைச்சர் டொக்டர் ஸ்ரீ சம்றி அப்துல் காதிர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் மிக விரைவில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் பிராக் மாநில முதலமச்சர் நம்பிக்கையளித்தார்.

மேலும், செப்டம்பரில் மலேசியாவில் இடம் பெறவுள்ள பொருளாதார அபிவிருத்தி மாநாட்டில், இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளுமாறும் ராஜாங்க அமைச்சருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் – தொழில்நுட்ப ரீதியாகவும், பாட விதான ரீதியாகவும் வழங்குவதாகவும் பிராக் முதலமைச்சர் உறுதியளித்தார்.Hisbullah - 0977

Comments

புதிது பேஸ்புக் பக்கம்