Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை 0

🕔15.Dec 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது. அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என,

மேலும்...
ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம்

ராஜா கொல்லுரேயின் இரங்கல் பதாகையில் முஸம்மில் படம்: வாரியபொல பிரதேச சபையின் ‘லூசு’த்தனம் 0

🕔7.Dec 2021

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானமையை அடுத்து, அவருக்கு இரங்கல் தெரிவித்து வெளியிடப்பட்ட பதாகையொன்றில் – கொல்லுரேயின் படத்துக்குப் பதிலாக, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் படம் அச்சிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாண சபையின் கீழ் வரும், வாரியபொல பிரதேச சபை வெளியிட்ட இரங்கல் பதாகையிலேயே, முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்லின் படம் உள்ளது.

மேலும்...
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார் 0

🕔7.Dec 2021

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில் காலமானார். வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த 03 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார். வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே, ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு

ஞானசார தேரரின் நியமனம் முட்டாள்தனமானது: பொதுஜன பெரமுன எம்.பி டிலான் பெரேரா தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக நியமியக்கப்பட்டுள்ள நிலையில்; அவர் குழு ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட்டமை முட்டாள்தனமான செயல் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்

மேலும்...
மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0

🕔9.Nov 2021

– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்...
“முடிந்தால் குறைத்துக் காட்டுங்கள்”: வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால்

“முடிந்தால் குறைத்துக் காட்டுங்கள்”: வடமேல் மாகாண ஆளுநருக்கு சவால் 0

🕔20.Oct 2021

முடிந்தால் அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து காட்டுமாறு குருணாகல் மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் சரத் பிரேமசிறி சவால் விடுத்துள்ளார். 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு வருகை தராத ஆசிரியர்களின் நொவம்பர் மாத சம்பளத்தை வழக்காதிருக்கத் தீர்மானித்துள்ளதாக வடமேல் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். ஆளுநரின்

மேலும்...
நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து

நாளையும், மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ரத்து 0

🕔20.Oct 2021

வடமேல் மாகாணத்தில் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களின் நொவம்பர் மாத கொடுப்பனவ வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார். எனவே மேற்படி நாட்களில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையினை தமக்கு வழங்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கு

மேலும்...
பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔13.Oct 2021

வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது, வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு சவால் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர்  கூறினார். எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில்

மேலும்...
தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔10.Oct 2021

தன்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் நிறுவப்பட்டு 72ஆவது ஆண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார். இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன? 0

🕔9.Oct 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம்

மேலும்...
ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது

ஏ.ரி.எம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சம் ரூபா திருடிய ஆசாமி கைது 0

🕔4.Oct 2021

வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்கள் இரண்டினை உடைத்து 76 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய சந்தேக நபரொருவரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏரிஎம் இயந்திரங்களை சந்தேகநபர் உடைத்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்பாவல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய

மேலும்...
சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை இணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாக, செயலாளர் தயாசிறி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் தமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது 0

🕔29.Aug 2021

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்களாவர். எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்ப்பட்டனர். பேஸ்புக் மூலம் சந்தேகநபர்கள் – அந்தப்

மேலும்...
சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம்

சிலாபம் நகரை ஒரு வாரம் மூடுவதற்கு தீர்மானம் 0

🕔18.Aug 2021

சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளதாக, நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.டப்ளியூ. சாதிக்குல் அமீன் தெரிவித்துள்ளார். சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள் இணங்காணப்பட்டதையடுத்து, கொரோனா பாதுகாப்பு சம்பந்தமாக நகர சபையின் தலைவர் துசான் அபேசேகர தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துறையாடலின் போதே

மேலும்...
வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம்

வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம் 0

🕔7.Aug 2021

மூன்று நபர்களின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் 10 வயது சிறுவனின் சடலமும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. குறித்த சடலங்கள் 28 வயதுடைய பெண், அவரின் மகன் மற்றும் அந்தப் பெண்ணின் கள்ளக் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்