வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம்

🕔 August 7, 2021

மூன்று நபர்களின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 10 வயது சிறுவனின் சடலமும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

குறித்த சடலங்கள் 28 வயதுடைய பெண், அவரின் மகன் மற்றும் அந்தப் பெண்ணின் கள்ளக் காதலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவத்துள்ளார்.

மேற்படி பெண்ணையும் அவரின் மகனையும் பெண்ணின் காதலன் கொலை செய்த பின்னர், அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்