பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷ, எனக்கு சவால் இல்லை: ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

🕔 October 13, 2021

டமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ போட்டியிடுவது, வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு சவால் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் மேற்கண்ட விடயத்தை அவர்  கூறினார்.

எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் யோஷித ராஜபக்ஷ முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற வதந்தி மட்டுமே உள்ளது என்றும், அவர் போட்டியிடுவரா இல்லையா என்பது அன்றைய தினத்திலேயே தீர்மானம் செய்யப்படும் என்றும் தயாசிறி மேலும் குறிப்பட்டார்.

“வடமேல் மாகாண மக்கள் அன்றும் இன்றும் என்னை நன்றாக நடத்துகிறார்கள். எனவே, இந்த மாகாண சபைத் தேர்தலிலும் வடமேல் மாகாண மக்கள் என்னை நன்றாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்