Back to homepage

Tag "டொக்டர் சுதத் சமரவீர"

தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா?

தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா? 0

🕔19.Jun 2021

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 11ஆம் திகதிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்த நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர

உக்ரைன் விமானப் பணியாளர் மூலமே, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவியது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔7.Jan 2021

நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை உக்ரைனிலிருந்து வந்த விமானப் பணியாளர் ஒருவரின் மூலமே பரவியது என பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோயியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கடந்த செப்டம்பரில் சீதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த

மேலும்...
முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்:  பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை 0

🕔1.Jan 2021

இலங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்; இந்த ஆண்டு கொவிட் -19 தடுப்பூசி குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன்

மேலும்...
உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔8.Dec 2020

உலக சுகாதார அமைப்பு அங்கிகரிக்கும் வரை, கொவிட் -19க்கான எந்தவித தடுப்பூசியையும் இலங்கை பெறாது என்று, சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் – நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில்

மேலும்...
30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம்

30 நிமிடங்களில் முடிவு; கொரோனாவை கண்டறியும் அன்டிஜன் பரிசோதனை ஆரம்பம் 0

🕔18.Nov 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில், தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில்; இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார்.

மேலும்...
கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர்

கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்தல் வேண்டும்: தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் 0

🕔12.Oct 2020

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸுடன் நாம் வாழப் பழக்கிக் கொள்ள வேண்டும் என, தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழு உலகிலும் காணப்படுவதாகவும், அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Jan 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்