முதல் அரையாண்டுக்குள் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதம தொற்றுநோயியல் நிபுணர் நம்பிக்கை

🕔 January 1, 2021

லங்கையில் உள்ள 20 சதவீத மக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள், இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரதம தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்; இந்த ஆண்டு கொவிட் -19 தடுப்பூசி குறித்து உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்றும், அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் பல நாடுகள் அவசர காலத்துக்கான சரிபார்ப்பைப் பெற்ற பின்னர் – தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை தற்போது அதன் மக்கள் தொகைக்கு ஏற்ற தடுப்பூசியை மதிப்பீடு செய்து வருகிறது என்றும், நாடு எவ்வாறு தடுப்பூசிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை மக்கள் தொகையில் 20 சதவீதத்தினருக்கு தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments