கொரோனா தொற்றுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 23 பேர், வெள்ளிக்கிழமை முதல் வைத்தியசாலையில் அனுமதி

🕔 January 29, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

08 பேரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் மூன்று பேரின் அறிக்கைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்றும் டொக்டர் சமரவீர மேலும் கூறியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற 03 ரத்த மாதிரி அறிக்கைகளில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.,மற்ற இரண்டு பேரின் ரத்தத்திலும் வைரஸ்கள் காணப்படவில்லை.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதாகக் கண்டு பிடிக்கப்பட்ட முதல் நபர் – சீனப் பெண்ணாவார்.

சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 47 வயதான மேற்படி பெண், தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments