மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார்

மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார் 0

🕔17.Jul 2020

– அஹமட் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை நிஸாம் மீண்டும் பெற்றுள்ளார்.

மேலும்...
தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

தன்னை கைது செய்யும் முயற்சிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, றிசாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔17.Jul 2020

தன்னை கைது செய்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் ஊடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும்,

மேலும்...
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றம்: பிள்ளைகளுக்கு பாதிப்பான பகுதி நீக்கப்படுகிறது 0

🕔17.Jul 2020

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பதிவாளர்கள் நாயகம் எம்.சீ. விதானகே தெரிவித்துள்ளார். அதற்கிணங்க பிறப்பத்தாட்சி பத்திரத்தில் பெற்றோர் திருமணமானவர்களா/ இல்லையா என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் உள்ள மேற்படி கேள்வி, பிள்ளைகளுக்கு பாதிப்பானது என்பதால், பழைய பிறப்பத்தாட்சி

மேலும்...
கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு

கவிஞர் மனுஷ்ய புத்திரன் கொரோனா தொற்றினால் பாதிப்பு 0

🕔17.Jul 2020

தமிழகக் கவிஞர், உயிர்மை சஞ்சிகையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் – கொரோனா தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவரே உறுதி செய்து, பதிவொன்றினை எழுதியுள்ளார். குறித்த பதிவில்; ‘ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (நேற்று வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றுதான்

மேலும்...
பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப்

பழிவாங்கல் கைதுகளை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்: அப்துல்லா மஹ்ரூப் 0

🕔16.Jul 2020

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று வியாழக்கிழமைஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ்

மேலும்...
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம் 0

🕔16.Jul 2020

சாய்ந்தமருதில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தளத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சோதனையின் பிரகாரம், கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை தாரியான அச்சி முஹம்மது ஹஸ்தூன் என்பவரின்  மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருக்கவில்லை என்கிற தகவல் அம்பலமாகியுளதாக, சிங்கள

மேலும்...
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார் 0

🕔16.Jul 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும்

மேலும்...
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது 0

🕔16.Jul 2020

– எ.எல். ஆஸாத் (சட்டத்தரணி) – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீண்டும் செயற்படுவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நீண்ட காலமாக பணியாற்றிய நிஸாம், அந்தப் பதவியிலிருந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால் இடைநிறுத்தப்பட்டதோடு, அந்த இடத்துக்கு எம்.கே.எம். மன்சூர் என்பவரை

மேலும்...
நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன?

நஸீரை கழற்றி விட்ட ஹக்கீம்; அட்டாளைச்சேனை மேடையில் சொன்னது என்ன? 0

🕔15.Jul 2020

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும், சில வேட்பாளர்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் சில குற்றச்சாட்டுகள் இருக்கும் என்றும், அதனை மனதில் வைத்து பகுத்துப் பார்த்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்குமாறும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தொலைபேசி சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை,  செலுத்துமாறு அறிவிப்பு

மூன்று மாத மின்சார கட்டணங்களுக்கு, சலுகை: பெப்ரவரி கட்டணத் தொகையை, செலுத்துமாறு அறிவிப்பு 0

🕔15.Jul 2020

நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலங்களுக்குரிய மின்சாரக் கட்டணங்களுக்கு அரசாங்கம் சலுகைகளை அறிவித்துள்ளது. அதற்கமைய மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கட்டணமாக பெப்ரவரி மாதத்திற்குரிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இந்த கட்டணத்தை

மேலும்...
புதிய கடற்படைத் தளபதி நியமனம்

புதிய கடற்படைத் தளபதி நியமனம் 0

🕔15.Jul 2020

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்த வழங்கியுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார். இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார். நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி

மேலும்...
75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

75 கள்ள வாக்குகள் போட்டதாக வேட்பாளர் ஒருவர் பேசியமை தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔14.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும், பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். அப்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது

மேலும்...
நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம்

நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு: அட்டாளைச்சேனையில் அதிசயம் 0

🕔14.Jul 2020

– முன்ஸிப் அஹமட் – கோழியொன்று அடைகாத்த முட்டையொன்றிலிருந்து நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சு ஒன்று வெளிவந்துள்ளது. அட்டாளைச்சேனை டீன்ஸ் வீதியிலுள்ள – தச்சுத் தொழில் செய்யும் ஜலால் என்பவரின் வீட்டில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 13 முட்டைகளை கோழியொன்றின் மூலம் தான் அடைகாக்கச் செய்ததாகவும், அந்த முட்டைகள் அனைத்தும் குஞ்சு பொரித்ததை அடுத்து, இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது

முஹம்மது நபியைப் பற்றி காட்டூன் வெளியிடப் போவதாக அச்சுறுத்தியவர் கைது 0

🕔14.Jul 2020

முஹம்மது நபியை பற்றி கார்ட்டூன் வெளியிடப்படும் என பேஸ்புக் இல் பதிவிட்ட இந்தியாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (30) என்வர், சமூக வலைதளத்தில் ‘வர்மா கார்ட்டூனிஸ்ட்’ என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார். சர்ச்சைக்குரிய யூ–டியூப் சேனல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அதனை

மேலும்...
ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்

ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார் 0

🕔14.Jul 2020

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளளார். கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். இதன்போது கடற்படைத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார். கடற்படைத் தளபதி வைஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்