ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதி, அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டார்

🕔 July 14, 2020

டற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளளார்.

கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.

இதன்போது கடற்படைத் தளபதிக்கு பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நாளைய தினம் ஓய்வு பெற உள்ளார்.

Comments