சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த பொறுப்பேற்க மாட்டார்

🕔 July 16, 2020

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மாட்டார் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை மஹிந்த பொறுப்பேற்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷ வசமிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி – மைத்திரி வசமானமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்