கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு 0

🕔19.Apr 2020

கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 6.00 மணி வரையில்) மட்டும், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை 269 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும், இவர்களில் 96 பேர் சுகமடைந்து தமது இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இலங்கையில் இதுவரையில் 07 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருந்தபோதும் உலகளவில் 23

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், மற்றொரு தாக்குதலுக்கும் திட்டமிடப்பட்டிருந்தது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔19.Apr 2020

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஞாயிறு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னரான நாளொன்றில் இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும்

மேலும்...
எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன்

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன் 0

🕔19.Apr 2020

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரோனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திஸாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின்

மேலும்...
ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு

ஊரடங்கு காலப் பகுதியில், சிறுவர் சித்திரவதை அதிகரிப்பு 0

🕔19.Apr 2020

தற்போதைய ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 1929 என்ற துரித தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளில் 43 வீதமானவை சிறுவர் சித்திரவதைக்குள்ளான சம்பவங்களுடன் தொடர்புபட்டவை என ​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், பேராசிரியர் முதித விதான பத்திரன

மேலும்...
தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔19.Apr 2020

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாளர் அமைச்சர் றிசாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மேலும்...
திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல்

திங்கள் தொடக்கம் தினமும் 15 மணி நேரம் ஊரடங்கு நீக்கம்: சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல் 0

🕔18.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம், ஏப்ரல் 20ஆம் திகதி, திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் –

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் 0

🕔18.Apr 2020

– பாறுக் ஷிஹான் – தகைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு  இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு

மரத்தில் சிக்கிய 05 அடி சிறுத்தைப் புலி; மயக்க மருந்து செலுத்தப்பட்டு மீட்பு 0

🕔18.Apr 2020

– க. கிஷாந்தன் – ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 08 மணிநேரம் தவித்ததை அடுத்து, மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மஸ்கெலியா – காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. மேற்படி தோட்டத்தில்

மேலும்...
புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

புதிய திகதியை அறிவிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Apr 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ள அவர்; 1981 ஆம் ஆண்டின் இலக்கம் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3)

மேலும்...
கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம்

கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம் 0

🕔18.Apr 2020

கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும், குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகை

மேலும்...
சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔17.Apr 2020

– ஏ.எல். எம். ஷினாஸ் –       கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி – சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையிலான

மேலும்...
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔17.Apr 2020

இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔17.Apr 2020

பல்கலைக்கழகங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்னும் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிபுணர்களும் தொற்று அதிகரிக்காது என்பதற்கான காரணத்தை இன்னும் நிராகரிக்கவில்லை. எனவே மே மாதம் 04ஆம் திகதி அரச

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி 0

🕔16.Apr 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிக பட்ச உயிரிழப்பாகும். அந்நாட்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் முக்கியமாக நிவ்யோக் நகரில் மட்டும் அதிகபட்சமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்