Back to homepage

மேல் மாகாணம்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை 0

🕔9.Jul 2018

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா, இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். புறக்கோட்டை  பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இன்று காலை 7.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔8.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றிலுள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்தக் கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இந்தக் கோரிக்கையினை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

மேலும்...
முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம்

முன்னாள் அமைச்சர் பசிலின் மனைவிக்கு, சீன நிறுவனம் பணம் வழங்கியமை அம்பலம் 0

🕔8.Jul 2018

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றுக்கு, 01 கோடியே 94 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சீன துறைமுக நிறுவனமொன்று வழங்கியமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவுக்கு குறித்த நிறுவனம் வழங்கிய காசோலை ஒன்றினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டமையினை அடுத்து, இது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. கொழும்பு  இன்டநசனல்

மேலும்...
125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது 0

🕔8.Jul 2018

களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் 125 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களாவர். இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், முச்சக்கர வண்டியொன்றும்

மேலும்...
கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

கோட்டாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: திஸ்ஸ விதாரண தெரிவிப்பு 0

🕔7.Jul 2018

கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்வரும ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதை, தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாண தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “2020 ஆம் ஆண்டில் நடைபெறவுளள ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதை, இடசாரி கட்சி என்ற வகையில் நாம்

மேலும்...
வில்பத்து தொடர்பில் உண்மையைத் தெரிவித்த சரத் பொன்சேகாவுக்கு, அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு

வில்பத்து தொடர்பில் உண்மையைத் தெரிவித்த சரத் பொன்சேகாவுக்கு, அமைச்சர் றிசாட் நன்றி தெரிவிப்பு 0

🕔6.Jul 2018

வில்பத்து சம்பந்தமான கணக்காய்வாளர் அறிக்கையென்று கூறி, சில தேரர்கள், அந்த அறிக்கையில் ஒரு சிறிய துண்டைப் பிடித்துக்கொண்டு மிக மோசமாக தன்னையும், வடக்கிலிருந்து 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தையும் சம்பந்தப்படுத்தி, ஒரு பெரிய நாடகத்தை தொடர்ச்சியாக அரங்கேற்றுவதாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு

எரிபொருள்களுக்கான விலைகள் அதிகரிப்பு 0

🕔6.Jul 2018

எரிபொருள்களின் விலைகளை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோலின் விலை 08 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை,  டீசல் விலை 09 ரூபாவாலும், சுப்பர் டீசர் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய விலைகள் வருமாறு; 92 ஒக்டைன்

மேலும்...
ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ

ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம், தனது ராஜிநாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன்  கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் மேலும்

மேலும்...
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ ராஜிநாமா 0

🕔5.Jul 2018

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதேவேளை, இன்று வியாழக்கிழமை அவருடைய அலுவலகத்தில் சிறிய பிரியாவிடை நிகழ்வொன்றும் இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய பி.பி. அபேகோன் ராஜிநாமா செய்தமையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றி வந்த ஒஸ்ரின் பெனாண்டோ 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம்,

மேலும்...
விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்

விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம் 0

🕔5.Jul 2018

புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகமொன்று

மேலும்...
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Jul 2018

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலகபெரும தாக்குதலுக்குள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சுக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டபோது காயமடைந்த நிலையில், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வியமைச்சுக்குக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று பல ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு ஆசிரியர்

மேலும்...
அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம்

அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு, விஜயகலா தீர்மானம் 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது தவறை – தான் உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெவிவிக்கையில்; “எனது தவறை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஏனெனில் நான் பெற்றுக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு

மேலும்...
சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார்

சதொச நிறுவனத்தில் நீண்ட காலங்களுக்குப் பின்னர், அதிகமானோருக்கு பதவியுயர்வு: அமைச்சர் றிசாட் வழங்கி வைத்தார் 0

🕔4.Jul 2018

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் இடம்பெற்றது. சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். சுமார்

மேலும்...
புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான்

புலிகளை உருவாக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை பெறவேண்டும் என்பது முட்டாள்தனமான கருத்து: முஜிபுர் றஹ்மான் 0

🕔4.Jul 2018

முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின்  சர்ச்சையைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தனது

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு 0

🕔4.Jul 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்