களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி சுமார் 125 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 29 மற்றும் 40 வயதானவர்களாவர்.
இவர்கள் ஹெரோய்னைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



