Back to homepage

மேல் மாகாணம்

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு 0

🕔1.Aug 2018

ஆப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும்,  இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.“உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள் உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப்

மேலும்...
சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம்

சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் 0

🕔1.Aug 2018

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவினை வழங்கியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர்

மேலும்...
சிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் விலை அதிகரிப்பு 0

🕔1.Aug 2018

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 03 ரூபா 80 சதமாக, நேற்று 31ஆம் திகதி நள்ளிரவு முதல், அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. சாதாரணமாக தற்போது சில்லறை விலையில், சிகரட் ஒன்று 50 ரூபாய்  வரையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, மதுபானத்துக்கான வரியினையும் அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே, தற்போது சிகரட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அரச நிறுவனங்களிலுள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை

அரச நிறுவனங்களிலுள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை 0

🕔1.Aug 2018

அரச நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி, அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில்

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு: 05ஆம் திகதி கண்டியில் 0

🕔31.Jul 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும், காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறும் எனவும் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது: மஹிந்த தெரிவிப்பு

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔31.Jul 2018

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்படும் வரையில், பழைய முறை செல்லுப்படியாகும் என்பதனால், இந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவன் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது: உயர் கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2018

போராட்டம் நடத்துவதற்காக பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல மில்லியன் ரூபா பணம் வழங்கப்படுவதாக, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டில் அரசியல் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தங்களது அபிலாசையை பூர்த்தி

மேலும்...
கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க ராணுவம் தீர்மானம்

கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தி, வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க ராணுவம் தீர்மானம் 0

🕔30.Jul 2018

இறுதி யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட வெடிபொருட்களைக் கண்டு பிடிப்பதற்கு, சாம்பல் நிற பெண் கீரிப்பிள்ளைகளை, இலங்கை ராணுவம் பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் தலைவர் மேஜர் ஜெனரல் ரேனுக ரொவல் தெரிவிக்கையில்; “வெடிபொருட்களை மோப்பம் பிடிக்கும் திறன் கீரிப்பிள்ளைகளுக்கு உள்ளது. மேலும், இதற்காக அவற்றினைப் பயிற்றுவிப்பதும் இலகுவாகும். அதேவேளை, இதற்காக நாயைப்

மேலும்...
சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினரின் கம்பனிக்கு, அரச வங்கியில் பெருந்தொகை சலுகைக் கடன்: எழுகிறது எதிர்ப்பு 0

🕔30.Jul 2018

அரசியல் தொடர்புகளைக் கொண்ட 05 கம்பனிகளுக்கு, அரச வங்கியொன்று மிகப்பெரும் பணத் தொகையினை சலுகை அடிப்படையில் கடனாக வழங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. அரசாங்கத்திலிருந்து பிரிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருடைய கம்பனியும் இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்படி கம்பனிகளுக்கு நியாயமற்ற வகையில் இவ்வாறான பெருந்தொகைக் கடனை வழங்கவுள்ளமை தொடர்பில்

மேலும்...
திடீர் பணக்காரர்களான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்: விசாரணைகள் ஆரம்பம்

திடீர் பணக்காரர்களான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔30.Jul 2018

சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் கணிசமானோர் திடீர் பணக்காரர்களாகி உள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை அதிகாரிகள் தொடக்கம் உதவி உத்தியோகத்தர்கள் வரை, அனைவரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் வருமானத்தினை தெரியப்படுத்துதல் வேண்டும். ஆயினும், மேற்படி உத்தியோகத்தர்கள், தமது சொத்துக்கள் பற்றிய பொய்யான  தகவல்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் தொழில் பெற்றதிலிருந்து கொள்வனவு செய்த சொத்துக்கள் மற்றும்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார்

மாகாண சபைத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும், மூன்று சதிகாரர்கள்: ஜி.எல். பீரிஸ் அம்பலப்படுத்தினார் 0

🕔30.Jul 2018

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் காலங்கடுத்தும் சதித்திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரே ஈடுப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது காலங்கடுத்துவதை தொடர்ந்தும் வேடிக்கை

மேலும்...
உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔28.Jul 2018

 – முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில் இன்று  சனிக்கிழமை நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று, அங்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. முன்னாள் உபவேந்தர் நாஜிமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மீண்டும் தெரிவு செய்யக் கூடாது

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது 0

🕔28.Jul 2018

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என்றும். அப்பொறுப்பிலிருந்து அந்த ஆணைக் குழு விலகிவிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் “ மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நவவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர்

மேலும்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன 0

🕔27.Jul 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔27.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய 07 சபைகளுக்கும், இவ்வாறு ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்