Back to homepage

மேல் மாகாணம்

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை

05 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு, சவூதியிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை 0

🕔23.Nov 2018

இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 03 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 02 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின்

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார் 0

🕔23.Nov 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார். மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இச்சவம்பவம் 2008

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார்

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார் 0

🕔23.Nov 2018

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அதற்கிணங்க; ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் வீரசன்ச ஆகிய 05 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், றிசாட்

மேலும்...
ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். அந்த வகையில், ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்: ஜனாதிபதியை கோருகிறார் எஸ்.பி 0

🕔23.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியைக் வேண்டிக் கொள்வதாக, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும், இது வரை அவர்கள் அதனைக் காட்டவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம்

மஹிந்தவை பிரதமராக நியமித்ததன் பின்னணியில் டட்லி; புதிய தகவல் அம்பலம் 0

🕔22.Nov 2018

 புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையின் பின்னணியில், ஜனாதிபதியின் சகோதரரும் அரலிய நிறுவனத்தின் தலைவருமான டட்லி சிறிசேன இருந்தார் என்பதை, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பு சதியொன்றின் மூலமாக, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி கூறிவரும் நிலையிலேயே, உதயங்க

மேலும்...
ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர்

ஜனநாயகத்துக்கு எதிராக, தொடர்ந்தும் மைத்திரி செயற்படுகிறார்: சமந்தா பவர் 0

🕔22.Nov 2018

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில், அவர் செயற்பட்டு வருகின்றார் எனவும் சமந்தா கூறியுள்ளார். நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை

மேலும்...
தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன 0

🕔22.Nov 2018

– எம்.எஸ்.எம். ஸாகிர் – நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதார்களிடமிருந்து 2019 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 20 பாடநெறிகளுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள், அவர்களின் தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்கும் தெரிவு செய்யப்படுவர். A 4 தாளில்

மேலும்...
யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி 0

🕔21.Nov 2018

“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு  வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். “விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட

மேலும்...
அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு 0

🕔20.Nov 2018

அடிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வொன்றினை நடத்துவதற்கு 25 மில்லியன் ரூபாய் (இரண்டரைக் கோடி) செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் 95 அமர்வுகளுக்காக,

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து

வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து 0

🕔20.Nov 2018

வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்துள்ளதாக

மேலும்...
மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔19.Nov 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குகளின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை ஆகியவற்றைப் பிரயோகித்து கலைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மஞ்சள் மற்றும்

மேலும்...
பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு 0

🕔19.Nov 2018

பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனை, கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர்

மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர் 0

🕔18.Nov 2018

இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடிய, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பிரதாயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமூகமாக தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்” என்றார். ஹம்பாந்தோட்டை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்