வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை, வஷீம் தாஜூடீன் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் நிஷாந்த சில்வா விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



