நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரம்; சபாநாயகர் அறிவித்தார்

🕔 November 23, 2018

நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களின் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அதற்கிணங்க;

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தினேஷ் குணவர்த்தன, எஸ்.பி. திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் வீரசன்ச ஆகிய 05 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன் கிரியெல்ல, ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய 05 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதி ராஜாவும், ஜே.வி.பி. சார்பாக விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்