பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதரகம் மீது தற்கொலைத் தாக்குதல்: இரண்டு பொலிஸார் பலி

🕔 November 23, 2018

பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தின் மீது, இன்று வெள்ளிக்கிழமை காலை  நடத்தப்பட்ட  தாக்குதலில் குறைந்தது 02 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

சீனத் தூதரகத்தினுள் ஆயுததாரிகள் நுழைய முற்பட்ட போதும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்துள்ளனர்.

இதன்போது நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் சில பொலிஸார் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர்.

இதேவேளை, மூன்று தற்கொலைத் தாக்குதல்தாரிகள் இதன்போது கொல்லப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வத் தரப்புக்கள் கூறுகின்றன. தாக்குதலுக்காக கார் குண்டு பயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலூசிஸ்தான் விடுதலைப் படை எனும் பிரிவினைவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ‘ட்விட்டர்’ பக்கத்தில் உரிமை கோரியுள்ளது.

அண்டை நாடான சீனா – பாகிஸ்தானின் நட்பு நாடாகும். பாகிஸ்தானுக்கு ஏராளமான உதவிகளையும், அந்நாட்டின் அடிப்படைக் கட்டுமானத் துறைகளில் ஏராளமான முதலீடுகளையும் சீனா செய்து வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்