ஆளுந்தரப்பு வெளிநடப்பு; 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

🕔 November 23, 2018

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில், தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அந்த வகையில், ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவிக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தெரிவுக்குழு விபரங்களை சபாநாயகர் அறிவிக்கும்போது சிறப்புரிமை பிரச்சினை எழுப்பிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்றில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாலும் ஆட்சியை தாங்களே நடத்துவதாலும் தெரிவுக்குழுவில் தமக்கு பெரும்பான்மை வாய்ப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

இதனால், தெரிவுக்குழு நியமனத்துக்கு வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரியதை அடுத்து, வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், ஆளுந்தரப்பினர் நாடாளுமன்றத்தை விட்டும் வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், அதன் முடிவுகளுக்கிணங்க தெரிவுக்குழு உறுப்பினர்கள் பற்றிய விபரத்தை சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, 27ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்