ஒன்பது வயது மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வு; சந்தேக நபருக்கு விளக்க மறியல்

🕔 April 5, 2016

Rape  -0998– க. கிஷாந்தன் –

பாடசாலையிலிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவியை கடத்தி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டின் பேரில் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எல்ல பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

தெமோதரை தமிழ் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்று வரும் 09 வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

பாதிக்க்பபட்ட மாணவி, ஆபத்தான நிலையில் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

எல்ல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 34 வயது நிரம்பிய திருமணமான இளைஞனை, எல்ல பொலிஸார் நேற்றிரவு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டதும், எதிர்வரும் 11ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்