ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்
ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப் பதவிக்கு தயாகமகே தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, ஐ.தே.கட்சியில் தயா கமகே வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயாகமகேயின் இந்தப் பதவி மாற்றமானது, ஒரு வகையில் தரமிறக்கமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்றை செயற்குழுக் கூட்டத்தின்போது, ஐ.தே.கட்சியின் தொழிற்சங்கத் தலைவராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டொக்கடர் கவிந்த ஜயவர்த்தன, கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவராகவும், தயா கமகேயின் மனைவி பிரதியமைச்சர் அனோமா கமகே – ஐ.தே.கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.