
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நிலுவையிலுள்ள ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகத் தவறியமையின் அடிப்படையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) இந்த பிடியாணையை பிறப்பித்தது.

கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இடையூறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சம்பவம் தொடர்பில், இந்த வழக்கு தொடரப்பட்டது.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா ராமநாதன் ஆஜராகவில்லை என்றும், அவரின் பிணைதாரரும் ஆஜராகவில்லை என்றும் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


